ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அமெரிக்காவில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி முன்வைத்துள்ள பிரேரணையில் சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளின் நியமனங்களை உள்ளடக்கி இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க காங்கிரசில், ஜனநாயக கட்சியின் உறுப்பினரான பிராட் ஷேர்மன் (brad Sherman) இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதாகவும், போர்க்குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.