2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு (Solomon Choil) தெரிவித்துள்ளார்.
‘ஜூலை 15க்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவர்களின் உத்தரவின் பேரில் அதை நிறைவேற்றியது ‘பெட்டோ’ தான் என அவர் மேலும் கூறினார்.
எனினும், இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை ‘2016இல் துருக்கியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. துருக்கியின் மூத்த அதிகாரிகள் கூறியதற்கு மாறாக, சமீபத்திய கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை.
துருக்கியில் நிகழ்வுகளுக்கான அமெரிக்க பொறுப்பு குறித்த ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற கூற்றுக்கள் நேட்டோ நட்பு மற்றும் அமெரிக்காவின் மூலோபாய பங்காளியான நிலைக்கு முரணானவை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.