இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு, மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டங்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் கலவரக் கவசத்தில் இருந்த அதிகாரிகள் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே வீதியில் நிறுத்தப்பட் டுள்ளனர்.
இரண்டாவது நாளாக யாங்கோனில் அணிவகுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு பலூன்களை ஏந்திச் சென்றனர். இது ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் நிறமாகும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “நாங்கள் இராணுவ சர்வாதிகாரத்தை விரும்பவில்லை! எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்” என்று வலியுறுத்தி ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.