இந்தியா நெருங்கிய நண்பன் என்றும், எனவே அதனுடனான எந்தவொரு பிரச்சினையையும் சிறிலங்காவினால், தீர்த்துக் கொள்ள முடியும் என்றும், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை, இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்ற சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தை விட பெரிய பிரச்சினையை கூட, ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதன் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் மிக நெருங்கிய நண்பனாக இந்தியா இருப்பதாகவும், அதனால் எந்த பிரச்சினையையும், பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.