கொரோனா தடுப்பூசி விநோயகத்தினை இம்மாத இறுதியில் மீண்டும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் பைசர் தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி கனடாவை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இரண்டாவது மருத்தளவு செலுத்தப்பட வேண்டியவர்களுக்காக முதலில் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி விநியோகிக்கப்படவுள்ளதாக பொதுசுகாதார தலைமை வைத்திய அதிகாரி தெரேசா டம் தெரிவித்துள்ளார்.