சசிகலாவுடன் சிறையில் இருந்த அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இவர்களுக்கு சொந்தமான சென்னை வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீராம் நகரில் உள்ள வீடு உள்ளிட்டனவே அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களின் சொத்துக்கள் சுவீகாரம் செய்யப்பட்டுள்ளன.