ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை (Alexei Navalny) சிறையில் அடைத்ததற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம்சாட்டி மூன்று ஐரோப்பிய, நாடுகளின் தூதுவர்களை வெளியேறுமாறு ரஷ்யா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவீடன், ஜேர்மனி, போலந்து இராஜதந்திரிகளின் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மொஸ்கோ கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல், (Josep Borrell) ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை (Sergei Lavrov) மொஸ்கோவில் சந்தித்த சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல், (Josep Borrell) கடுமையான கண்டத்தை பதிவு செய்துள்ளார்.