சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டடத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கனடாவின் ரொரண்டோவில் மாபெரும் வாகனப்பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப்பேரணியானது ஹியூவொண்டாரியோ (Hurontario St) வீதி ஸ்டீல்ஸ் அவென்யு (Steeles Ave ) இல் ஆரம்பித்து பிராம்ப்டன் (Brampton ) ஸ்டீல்ஸ் வழியாக யங்க் வீதியை (Yonge St ) அடைந்து அதனூடாக வெளிங்டன் வீதியை (Wellington St) அடைந்து யூனிவர்சிட்டி அவென்யு ( University Ave) ஐ அடைந்து குயின்ஸ் பார்க் (Queens Park) ஒண்டாரியோ சட்டமன்றத்தை அடைய உள்ளது.
Haskell Ave மற்றும் Harwood Ave இல் ஆரம்பிக்கும் கிழக்கு பகுதி பேரணி Harwood Ave ஊடாக Williamson Dr W ஐ அடைந்து Kingston Rd W ஐ அடைந்து அதனூடாக பயணம் செய்து Sheppard Ave E ஐ அடைந்து அங்கு Markham Rd இல் டொரோண்டோ பேரணியோடு இணைந்து கொள்ளவுள்ளது.
டொரோண்டோ பேரணி Markham Rd & Steeles Ave E சந்திப்பில் ஆரம்பித்து Markham Rd வழியாக Sheppard Ave E ஐ அடைந்து அங்கு அஜெக்ஸ் பேரணியையுடன் சேர்ந்து யங் வீதியை அடைந்து அங்கு நான்கு டாதில் இருந்து வரும் பேரணிகளும் இணைந்து குயின்ஸ் பார்க் செல்லவுள்ளது.
மிஸ்ஸிசாக பேரணியும் யங் வீதி மற்றும் Sheppard Ave E சந்திப்பில் மற்ற பேரணிகளோடு இணைந்து குயின்ஸ் பார்க் செல்ல வுள்ளது.
இதன்போது, கொரோனா விதிமுறைகளை மதித்து பேணுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதோடு வாகனங்களை விட்டு யாரும் இறங்க வேண்டாம் என்றும், வரையறைகளுக்கு அமைவாகவே வாகனங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாயகத்தில் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் இந்த மாபெரும் கலந்து கொண்டு வரலாற்றுக் கடமையை ஆற்ற மக்களே அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.