கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இன்னமும் அதிகாரபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்து போது, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது.
இந்த உடன்பாட்டுக்கு முரணான வகையில், கிழக்கு முனையம் முழுவதையும் துறைமுக அதிகார சபையே அபிவிருத்தி செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவு இந்தியாவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இந்தியா ஏற்கனவே இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.