வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த மூன்று சர்வதேச பயணிகள், கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக கனடாவுக்கு வரும் அனைவருக்கும் ரொறன்ரோ விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, கனடாவுக்கு வந்த, 5 பயணிகள், பிசிஆர் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.
இவர்களுக்கு தலா 750 டொலர் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.





