யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனாவுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவதில்லை என்ற முடிவு அமைச்சரவையில் எடுக்கப்படுவதற்கு முன்னதாகவே, இந்தியா இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு மிக நெருக்கமாக உள்ள நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில், கலப்பு மின் திட்டங்களை அமைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே இந்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் கூறுகின்றன.