முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது.
ஆனால் முறைய நடத்தைகளைக் கொண்டுள்ள ட்ரம்புக்கு அது தேவையில்லை. அவருக்கு எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் உளவுத்தகவல்களை தெரிவிப்பது என்று கேள்வி எழுப்பினார்.
ட்ரம்புக்கு உளவுத் தகவல்களை தெரிவித்தால்,வெளியே கசியவிட்டு, அதுபற்றி பொதுவெளியில் ஏதாவது பேசுவாரே தவிரவும் வேறு என்ன பலன் விளையப் போகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.