யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக, இனஅழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் இருந்து பல்கலைக்கழக மாணவர்களால் மண் சேகரிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி நேற்று மதியம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலை அடைந்தது.
அங்கு படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில், மதகுருமாரின் முன்னிலையில், நினைவிடத்தின் மண், மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, யாழ். பல்கலைக்கழக நினைவுத் தூபிக்கு எடுத்து வரப்படவுள்ளது.