பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் இறுதி அத்தியாயத்தினை முன்னெடுப்பதில் சிக்கல்கள் எழுந்தள்ளது.
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும்போது காவல்துறை, விசேட அதிரடிப்படையினரால் தடைகளை ஏற்படுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடைபயணத்தில் செல்லும் ஒருவருக்கு காணப்படம் ஜனநாயக உரிமையை நீதிமன்றத்தடை கட்டுப்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் நாளைய பேரணிக்கான ஆதரவும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், சசிகலா ரவிராஜ் ஆகியோர் இந்த செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர்.