மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு இடம்பெற்றுள்ள தாக்குதல் ஒன்றில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோகாங் (gogong) தலைநகருக்கு சென்று கொண்டிருந்த வாகனம் மீது, மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 3 காவல்துறையினரும், 9 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 8 பொதுமக்களும், 5 காவல் அதிகாரிகளும், காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து மியான்மாரின் உள்நாட்டுப் போர் மீண்டும் மூளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.