மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த பத்தாண்டுகளில் இல்லாதளவுக்கு மக்கள் பேரணி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு, வீட்டுக்காவிலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகியை (Aung San Suu Kyi ) விடுவிக்கக் கோரி, இன்று இந்தப் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.
“இராணுவ சர்வாதிகாரம் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும்” என்று யாங்கோன் (Yangon) நகரில் வான் அதிர முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது.
மியான்மாரில் உள்ள வேறு பத்துக்குக்கும் மேற்பட்ட நகரங்களிலும் இவ்வாறான பேரணிகள் இடம்பெற்றுள்ளன.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மூன்று விரல்களை உயர்த்தியபடி பேரணியில் பங்கேற்ற மக்கள், ஆங் சாங் சூகியின் (Aung San Suu Kyi) கட்சியின் நிறமான சிறப்பு நிற மேலாடையை அணிந்து, சிவப்பு நிற பலூன்களையும் ஏந்தியிருந்தனர்.
2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பாரிய பேரணி அரசுக்கு எதிராக இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.