மியன்மார் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தென்கிழக்காசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் முஹைதீன் யசீன், இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது இந்தோனேசிய ஜனாதிபதி ஜொக்கோ விடோடோவை சந்தித்த மலேசிய பிரதமர், மியன்மார் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளுக்கான அமைப்பில் இது தொடர்பில் கலந்துரையாடுமாறு இரு நாட்டு தலைவர்களும் தமது வெளிவிவகார அமைச்சர்களைக் கோரியுள்ளனர்.