இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைக் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து தனது உத்தியோக பூர்வ கீச்சகப் பக்கத்தில் செய்துள்ள பதிவில், போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இரண்டு தரப்பினரும் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
டெல்லியில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் இரண்டு மாதங்களாக மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுடன் அரசாங்கத் தரப்பு நடத்திய 11 கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.