கனடிய வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளவர்கள் அனுமதிக்கப்’படுவதில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக பொதுசுகாதாரதுறையின் தலைமை வைத்திய அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
இந்த புள்ளிவிபரமானது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொரொனா பாதுகாப்பு விதிமுறைகளில் இருந்து மக்கள் விலகி நிற்கக்கூடாது என்றும் அவற்றைத் தொடர்ந்தும் பின்பற்றுதல் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஒன்ராரியோ, கியூபெக்கில் சராசரியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமை தொடர்பிலும் அவதானம் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.