கொரோனா வைரசுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா மிகப்பெரிய நாடு, மக்கள் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொருக்கும் கிடைக்கும் வகையில் அதிகமான தடுப்பூசிகளை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இப்போதுள்ள சூழலில் வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசியை விற்பனை செய்தால் சூழலை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகலாம்.” என்றும், மத்திய சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.