முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை உண்மையில் நிறுத்த விரும்பினால், ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கிவிட்டு அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்ப வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷரீஃப் (Mohammad Jawad Sharif) தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியது அமெரிக்கா தான், இந்த ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்கா தான், மரியாதைக்குரிய மற்றும் ஒப்பந்தத்திற்கு இணங்க எந்த நாட்டையும் தண்டித்ததும் அமெரிக்கா தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளிலிருந்து அமெரிக்கா விலக விரும்புகிறதா, அல்லது ட்ரம்பின் “தோல்விகளை” கட்டியெழுப்ப விரும்புகிறதா என்பதை பைடன் நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இரத்து செய்யப்பட்டால் மட்டுமே தனது நாடு அதன் கடமைகளுக்குத் திரும்பும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது