ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 489 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இக்காலப்பகுதியில் 22 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று பொதுச்சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, கியூபெக்கில் ஆயிரத்து 81பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு அங்கு 32 மரணங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த இரண்டு பிரதான மாகாணங்களிலேயே சராசரியாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அல்பேர்ட்டாவில் 351 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு நாடாளவிய ரீதியில் 3ஆயிரத்து 20தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.