உய்குர் முஸ்லிம்களை இலக்குவைத்து சீனா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக குளிர்கால ஒலிம்பிக் தொடரை அந்நாட்டிலிருந்து பிற நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் கனடாவில் வெகுவாக எழுந்துள்ளன.
குளிர்கால ஒலிம்பிக் தொடர் 2020ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், சீனாவில் சிறுபான்மையினராக வாழும் உய்குர் முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றமையை கண்டிக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து குளிர்கால ஒலிம்பிக் தொடர் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவில் பல்வேறு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வலியுறுத்தல்களைச் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது