30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் போது, ஏதாவது சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால், அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை நடத்தும் என்று சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது, இரண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும், 2015இல் அவர் தோற்கடிக்கப்பட்டதால் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் வன்மையாக மறுக்கிறது என்றும், அத்தகைய சம்பவங்கள் நடக்கவில்லை என்று, பிரித்தானியாவின் உள்துறை அமைச்சே கூறியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார.
புலம்பெயர் தமிழர்களின் பக்கச்சார்பான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்றும், உள்நாட்டு விசாரணையின் அநீதிகள் இழைக்கப்பட்டமை கண்டறியப்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.