முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான ஒக்ஸ்போர்ட். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸின் மாறுபாட்டால் இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இல்லை என்று அந்நாட்டு சகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந் நிலையில் அடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிவியல் ஆலோசனைகளுக்காக அரசாங்கம் காத்திருப்பதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் கூறினார்.
தென்னாபிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட வைர ஸ் மாறுபட்டதிலிருந்து “குறைந்தபட்ச பாதுகாப்பை” மட்டுமே இத்தடுப்பூசிகள் வழங்கியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.