தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்று தமிழகம் திரும்புயுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் விடுதி ஒன்றில் தனிமைப்ப படுத்தப்பட்டிருந்தார்..
இதனிடையே சசிகலா அ.தி.மு.க. கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு க்கள் வலுத்தன. இதனையடுத்து காவல்துறையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அந்த காரில் இருந்து கொடியும் அகற்றப்பட்டுள்ளது.
அவர் , ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறியுள்ளார். அந்த காரிலும் அ.தி.மு.க. .கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்துக்கு திரும்பிய அவருக்கு, ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது