பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பொலிகண்டியில் நேற்று நிறைவடைந்த பேரணியில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகப் பெரியளவில் மக்கள் ஒன்றிணைந்திருந்தனர் என்றும், அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் இருந்து சிறுபான்மைக் கட்சிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றதும், பல பத்தாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதும் இந்தப் பேரணியின் பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேரணியில் மனோ கணேசன், அசாத் சாலி, அமீர் அலி, இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு ஆதரவு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.