‘போராட்ட ஜீவிகள்’ என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது பதிலளித்துப் பேசிய அவர், போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாகவும் எந்த வகை போராட்டம் எங்கு நடந்தாலும் அவர்கள் சென்றுவிடுவதாகவும் விமர்சித்தார்.
போராட்டங்கள் இல்லாமல் வாழ முடியாத; அத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி கூறினார்.
திரிணமூல் நாமாளுமன்ற உறுப்பினர் பேசும்போது ஆத்திரமூட்டல், பேச்சு சுதந்திரம் என்றெல்லாம் பேசியதாகவும் ஆனால் அவர் மேற்குவங்கத்தை நினைத்துக் கொண்டு இங்கு பேசுவதாகவும் கிண்டல் தொனியில் விமர்சித்தார்.
அதேமயம் நாகரிகமாகவும் நல்ல சொற்களையும் தேர்ந்தெடுத்துப் பேசும் குலாம் நபி ஆசாத்தை (Ghulam Nabi Azad) பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டார்.