மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், , 24ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்.
நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே பாகிஸ்தான் பிரதமரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 24ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள அதே நாளிலேயே இம்ரான் கானின் உரை இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.