மியான்மரில், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவத்துக்கு எதிரான போராட்டம் தலைநகர் நேபிடோ (naypyidaw) வுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நான்காவது நாளாக மியான்மர் மக்கள் இராணுவ அதிகாரத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தலைநகர் நேபிடோவில் (naypyidaw) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்களைக் கலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் அவர்களின் மீது, இறப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் மியான்மரில் பதற்ற நிலை அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.