சிறிலங்காவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 740 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 365 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 720 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 356 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.