எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்கும் வகையில், மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் தடுப்பூசி போட்ட தகவல்களை உள்ளடக்கியதாக தடுப்பூசி கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் விரைவில் மக்கள் தங்கள் தடுப்பூசி நிலை தொடர்பாக வெளிப்படுத்துவதை எளிதாக்கும் வகையிலேயே, தடுப்பூசி கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது கையில் எடுத்துச் செல்லும் வகையிலானது அல்ல என்றும், தனிநபர்கள் தங்களின் உடல்நிலை சார்ந்த தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் சான்றிதழ்களை சேமித்து வைக்க உதவும் செயலியே என்றும் கூறப்படுகிறது.
திறன்பேசியில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்களின் சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவு, உடல் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி செலுத்திய தகவல்களின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட நபர், பயணிக்க பாதுகாப்பானவரா என்பதை செயலி குறிப்பிடும் என்றும் கூறப்படுகிறது.