மொண்ட்ரியலில் சென்.லியோனார்ட் (St-Leonard borough) நகரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இப்பகுதியில் வாகனமொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக கிடைத்த தவலை அடுத்து அப்பகுதிக்கு வருகை தந்திருந்த காவல்துறையினர் வாகனமொன்றில் பலத்த காயங்களுடன் பெண்ணொருவர் இருப்பதை கண்டறிந்தனர்.
அவர் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பிறிதொரு தெருவில் 21வயதான இளைஞரும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் இந்தப்பகுதியில் வாகனத்தரிப்பிடத்தில் தனது வாகனத்தினை நிறுத்த முயன்றபோது சிறு குழுவினரால் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.