உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், தவுளிகங்கா ஆற்றில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், சுமார் 200 பேர் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பொலிஸ் ஆணையர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிடுகையில், இன்று இரவு 8 மணி வரையில் 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும் 171 பேரை காணவில்லை என்றும், அவர்களில் 35 பேர் சுரங்க பாதையில் இருக்க கூடும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உத்தரகாண்ட் பேரிடர் மேலாண் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் 197 பேரை காணவில்லை என தெரிவித்து உள்ளது.
இந்தோ-திபெத் எல்லை படை குழுவினர் இரவிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.