வீட்டில் இருக்கும் உத்தரவிலிருந்து மீளும் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் புதிய விதிமுறைகள் தொடர்பில் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், வியாபார தளங்கள் மற்றும் உணவங்களில் மொத்த கொள்ளளவு பெறுமானத்தில் 25சதவீதமானவர்களுக்கே அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் ஐம்பது சதவீதமானவர்கள் வரையில் உள்ளீர்க்க முடியும் என்றும் எனினும் நீண்ட நேரம் தரித்திருத்தல் சமூக இடைவெளிகள் இன்றி இருத்தலை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மீள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.