பெங்களூரில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்ட சசிகலா, 23 மணிநேர பயணத்துக்குப் பின்னர், இன்று காலை சென்னையை சென்றடைந்துள்ளார்.
பெங்களூருக்கு அருகில் உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு, பெங்களூர் – சென்னை இடையிலான சாலையில், பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூர் முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால், தேவனஹள்ளியிலிருந்து சென்னை இடையிலான சுமார் 380 கி.மீ. தூரத்தை அவர் கடக்க 23 மணி நேரத்திற்கும் மேலானது.
இன்று அதிகாலை மூன்றே முக்கால் மணியளவில் சென்னை நகருக்குள் நுழைந்த சசிகலாவின் வாகன பேரணி, 4.15 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தை சென்றடைந்தது.
எம்.ஜி.ஆரின் இல்லத்திற்குள் சிறிது நேரம் அமர்ந்திருந்த சசிகலா, அங்கிருந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், தி நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு காலை 7 மணியளவில், சென்றடைந்துள்ளார்