ஒன்ராரியோவின் பெரும்பாலான இடங்களில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
குயின்பார்க்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே முதல்வர் டக்போர்ட் இதனைத் தெரிவித்தார்.
ஒன்ராரியோவின் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ரொராண்டோ, பீல்பிராந்தியம், யோர்க் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன், கிங்ஸ்டன், (Kingston) புரொன்டெனாக் (Frontenac),லெனாக்ஸ், (Lennox) அடிங்டன் (Addington) ஹேஸ்டிங் (Hasting), பிரின்ஸ் எட்வர்ட் (Prince Edward) உள்ளிட்ட சுகாதார பிரிவுகளில் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று பிராந்தியங்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலேயே வீட்டில் இருக்கும் உத்தரவு காணப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஒன்ராரியோவில் டிசம்பர் 26ஆம் திகதியிலிருந்து வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.