மியான்மருடனான அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தொடர்புகளையும் நிறுத்திக் கொள்வதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (jacinda ardern) அறிவித்துள்ளார்.
மியான்மரின் இராணுவத் தலைவர்கள் மீது நியூசிலாந்து பயணத் தடை விதிக்கும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
மியான்மருக்கான உதவித் திட்டத்தில் இராணுவ அரசாங்கம் பயனளிக்கும் திட்டங்கள் அடங்காது என்றும், நியூசிலாந்துப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மியன்மாரில் இராணுவ அரசாங்கத்தின் நியாயத்தன்மையை நியூசிலாந்து அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் நனாயா மகுடா (Nanaia Mahuta) தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் உடனடியாக விடுவித்து பொதுமக்கள் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.