விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பேர்க்கிற்கு எதிராக சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், போன்ற பிரபலங்கள் திசை திருப்பப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய 18 வயது இளம் பெண்ணுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடும் குளிரில் போராடும் விவசாயிகளுக்கு உணவு குடிநீர் வழங்க கூட மத்திய அரசு முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.