யூடியூப் பக்கம் ஒன்றுக்காக, கொள்ளையடிப்பதை போன்ற குறும்பு காணொளி எடுக்க முயன்ற 20 வயதுடைய டிமோத்தி வில்க்ஸ் என்ற இளைஞன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் நாஷ்வில் (Nashville) நகரத்திலுள்ள பூங்கா ஒன்றின் முன்பு, நின்று கொண்டிருந்த மக்களை நோக்கி, டிமோத்தி வில்க்ஸ் (Timothy Wilks) உள்ளிட்ட இருவர், பெரிய கத்திகளுடன் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்கள் இருவரும் குறும்பு காணொளி எடுப்பது குறித்து அறியாத இளைஞன் ஒருவர், தற்காப்புக்காக, துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதன்போதே குறித்த இளைஞன் கொல்லப்பட்டதாக, தெரிவிக்கப்படுகிறது.