2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘2015ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது.
சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஈரானுடனான தங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம்’ என கூறினார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது