இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான உச்சிமாநாடு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது.
இதன்போது இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் காபூலில் ஷாஹூத் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
உச்சிமாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியுடன் பேசிய இந்திய பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தங்கள் நாட்டுப் பகுதிகள் பயங்கரவாதத்திலிருந்து விடுபட விரும்புகின்றன. ஷாஹூத் அணை, காபூலுக்கு குடிநீர் வசதியை வழங்குவதுடன் நீர்ப்பாசன நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.