வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகள் மூலம் கொரோனாவை கண்டறியும் பயிற்சி, இந்திய இராணுவத்தில் உள்ள நாய்களுக்கு வழங்கப்படுவதாக கேணல் சுரேந்தர் சைனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பயிற்சியாளரான, சுரேந்தர் சைனி,
“லேப்ரடர் மற்றும் சிப்பிபாறை ரக நாய்களுக்கு, சிறுநீர் மாதிரிகள் மூலம் கொரோனாவை கண்டறியும் பயிற்சியும், கக்கர் ஸ்பானியல்ஸ் ரக நாய்களுக்கு வியர்வை மாதிரிகள் மூலம் கொரோனாவை கண்டறியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுவரையான பயிற்சிகளின் அடிப்படையில் 95 சதவீத முடிவுகள் சரியாக வந்துள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.