உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து உருவான வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களின் மீட்புப் பணிகளில் பங்களிப்பு அளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio guterres) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் (Stephen Dujarric) வெளியிட்டுள்ள அறிக்கையில் “உத்தரகண்ட் மாநிலத்தில், பனிப்பாறை உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் இந்திய அரசுக்கும் பொதுச்செயலாளா் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டுள்ளார்.
தேவைப்பட்டால் தொடா்ந்து மீட்புபணிகளிலும், தற்போது காணாமல் போனவா்களை மீட்பது தொடா்பாகவும் உதவி புரியவும், அந்தப்பணிகளில் பங்களிப்பு அளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.