வடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் மைனஸ் 40 பாகை யாக இருக்கும் என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சுற்றுசூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இரவு நேரப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் அவதானமாக பயணங்களில் ஈடுபடுமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலநிலையானது அடுத்து வரும் சில நாட்களுக்கு தொடலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் சுற்றுச்சூழல் திணைகளம் குறிப்பிட்டுள்ளது.