கீச்சகத்தின் விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் நீக்கப்படும் என கீச்சக நிறுவனம் இந்திய மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும், 1178 கீச்சக கணக்குகளை நீக்கும்படி இந்திய மத்திய அரசு, கீச்சக நிர்வாகத்திடம் கேட்டிருந்தது.
அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்க கீச்சக நிறுவனம் மறுத்துள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,
கீச்சக நிறுவனம் ‘வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடலை மேம்படுத்துதல்’ கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.
உள்ளடக்கம் விதிகளை மீறினால், நிச்சயம் அது நீக்கப்படும். ” என்று அவர் கூறியுள்ளார்.