பிரிட்டிஷ் கொலம்பியாவில் 80 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என பொது சுகாதார அதிகாரி வைத்தியர் போனி ஹென்றி (Pony Henry) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும், மாகாணத்தின் தடுப்பூசி வழங்கல் அதிகரிக்கும் எனவும் தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசி எங்கு கிடைக்கும் என்று விரைவில் அறிந்து கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும் விவரங்களை சேகரித்து வருகிறோம். அதன் பின்னர் மக்களை நாம் நேரடியாக தொடர்பு கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.