சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகவுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவிய செய்தி முற்றிலும் வதந்தி என, பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச இன்று விலகவுள்ளார் என, அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியதாக நேற்று மாலை சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
எனினும், இது போலியான செய்தி என்றும், அவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை என்றும், யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிச் செய்தி பரவியதும் குறிப்பிடத்தக்கது.