சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், ஐ.நாவின் முன்னாள் நிபுணருமான யஸ்மின் சூகாவுக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக உள்ள மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது சார்பில், சட்டவாளர் லக்சிகா பக்மிவெவ கடந்த 7ஆம் நாள், கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கைப் பதிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யஸ்மின் சூகா மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் சார்பில், மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, பற்றி பல்வேறு ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகளில் புகழ்பெற்ற ஒரு அதிகாரியான, மேஜர் ஜெனரல் சாலேவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.