சீனா அண்டைய நாடுகளை மிரட்டுவதாக குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்கா, இந்திய – சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ்,
“சீனா தனது அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் கவலையடைந்துள்ளோம்.
பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
இந்தியா – சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க அமெரிக்கா, ஆதரவு அளிக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்.